அன்பனே போற்றி
அருள்செய் வகைசெய்
மருளுடை வாசனே போற்றி
ஆரமுதே போற்றி
அன்பிலே உருகிடும்
பொன்மான சுடரே போற்றி
இச்சகா போற்றி
இருளிடை தோன்றிடும்
ஒளியினாய் போற்றி
ஈசகா போற்றி
இன்பமே தந்திடும்
ஷண்முகா போற்றி
உலகனே போற்றி
உய்விட ஓர்க்கும்
மெய்யனே போற்றி
ஊர்விதா போற்றி
ஊற்றிடை பெருகிடும்
உத்தமா போற்றி
என்னவா போற்றி
யேமனை எரித்திடும்
அண்ணலே போற்றி
ஏந்தலே போற்றி
எண்திசை வணங்கிடும்
கந்தனே போற்றி
ஐயனே போற்றி
அருலிடை மலர்ந்திடும்
ஆதவா போற்றி
ஒளிர்ந்தவா போற்றி
உலகினை காத்திடும்
ஒருவனே போற்றி
ஓங்கினாய் போற்றி
உமையவள் உருகிடும்
அறுமுகா போற்றி
ஒளவினாய் போற்றி
அகத்திடை அகலா
ஆண்டவா போற்றி
அக்துன தருளே
மாற்றிட வேண்டேன்
சிற்றிடை நாயகா
போற்றி போற்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக