ஆருயி ரமுதோனே ஆறுமுகா
அன்பிற் கரையிலா ஷண்முகா
பாரும் எனையுன திருமலரால்
பாலனிவ னிடமுள பாவால்
காருமெனை கடைவழி யோடிரு
காந்தலி டையாள் கமலனாய்
செருமென்னை செம்பவள பாதம்
செய்யுளினை சேகரியும் சந்தகனே!
இறைமாலை
வியாழன், 16 ஜூன், 2011
வெள்ளி, 25 பிப்ரவரி, 2011
௩
நிந்தன் பதமெந்தன் முதலென் றன்நின்
நிழலென் குடில்என்றேன் இவன்றோ
விந்தையோ னிந்த விமலன் இடர்தீர்
வீசியோ தந்தன் வெஞ்சிறை விடுத்தோய்
இந்திரையே இருதளிர் கரமொடு மருவருவா
மலராய் மலரதனை மனதோடு அணைத்தாய்
எந்தன் தேகமுன் னடிகளில் தீபமாய்
ஏற்றிட வேண்டினேன் ஆற்றுவாய் அன்னையே !
நிழலென் குடில்என்றேன் இவன்றோ
விந்தையோ னிந்த விமலன் இடர்தீர்
வீசியோ தந்தன் வெஞ்சிறை விடுத்தோய்
இந்திரையே இருதளிர் கரமொடு மருவருவா
மலராய் மலரதனை மனதோடு அணைத்தாய்
எந்தன் தேகமுன் னடிகளில் தீபமாய்
ஏற்றிட வேண்டினேன் ஆற்றுவாய் அன்னையே !
சனி, 19 பிப்ரவரி, 2011
௨
காஞ்சி நகருனதே அல்லவேயாம் ஆங்கே
கடையவர் வழியினில் காட்சியு மல்லையே
அஞ்சே மாண்புறு மதுரை வாழ்தேவி
அழிவிலை என்மனத் தினில் தீபமாய்
வெஞ்சி உனை காசியில் மாசுற
விடேனோ வெண்தாமரை தடாகம் அன்றோ
நெஞ்சே நின்நினை வினில்நிலை இலையெனில்
நாடுவாய் என்னது நாவினில் பாவாய்
கடையவர் வழியினில் காட்சியு மல்லையே
அஞ்சே மாண்புறு மதுரை வாழ்தேவி
அழிவிலை என்மனத் தினில் தீபமாய்
வெஞ்சி உனை காசியில் மாசுற
விடேனோ வெண்தாமரை தடாகம் அன்றோ
நெஞ்சே நின்நினை வினில்நிலை இலையெனில்
நாடுவாய் என்னது நாவினில் பாவாய்
ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011
௧
எனையொரு பொருட்டா ஏற்றினை
அடியவர் புகழிட பாவானாய் அல்லே
கனிந்தே அமுத மழை கனந்துற கண்ணில்
காட்சியோ டியைந்த மாட்சி தந்தே
நனைந்தே னுன்னருள் மழையினி லருகுபோல்
நவின்றே நாவால் திறமொடு அருளினை
நினைந்தோர் நெஞ்சத்து உரிமையோ செந்
நகரினில் எழுந்தாய் சேவடி தந்தாய்
அடியவர் புகழிட பாவானாய் அல்லே
கனிந்தே அமுத மழை கனந்துற கண்ணில்
காட்சியோ டியைந்த மாட்சி தந்தே
நனைந்தே னுன்னருள் மழையினி லருகுபோல்
நவின்றே நாவால் திறமொடு அருளினை
நினைந்தோர் நெஞ்சத்து உரிமையோ செந்
நகரினில் எழுந்தாய் சேவடி தந்தாய்
கடவுள் வாழ்த்து
அன்பனே போற்றி
அருள்செய் வகைசெய்
மருளுடை வாசனே போற்றி
ஆரமுதே போற்றி
அன்பிலே உருகிடும்
பொன்மான சுடரே போற்றி
இச்சகா போற்றி
இருளிடை தோன்றிடும்
ஒளியினாய் போற்றி
ஈசகா போற்றி
இன்பமே தந்திடும்
ஷண்முகா போற்றி
உலகனே போற்றி
உய்விட ஓர்க்கும்
மெய்யனே போற்றி
ஊர்விதா போற்றி
ஊற்றிடை பெருகிடும்
உத்தமா போற்றி
என்னவா போற்றி
யேமனை எரித்திடும்
அண்ணலே போற்றி
ஏந்தலே போற்றி
எண்திசை வணங்கிடும்
கந்தனே போற்றி
ஐயனே போற்றி
அருலிடை மலர்ந்திடும்
ஆதவா போற்றி
ஒளிர்ந்தவா போற்றி
உலகினை காத்திடும்
ஒருவனே போற்றி
ஓங்கினாய் போற்றி
உமையவள் உருகிடும்
அறுமுகா போற்றி
ஒளவினாய் போற்றி
அகத்திடை அகலா
ஆண்டவா போற்றி
அக்துன தருளே
மாற்றிட வேண்டேன்
சிற்றிடை நாயகா
போற்றி போற்றி
அருள்செய் வகைசெய்
மருளுடை வாசனே போற்றி
ஆரமுதே போற்றி
அன்பிலே உருகிடும்
பொன்மான சுடரே போற்றி
இச்சகா போற்றி
இருளிடை தோன்றிடும்
ஒளியினாய் போற்றி
ஈசகா போற்றி
இன்பமே தந்திடும்
ஷண்முகா போற்றி
உலகனே போற்றி
உய்விட ஓர்க்கும்
மெய்யனே போற்றி
ஊர்விதா போற்றி
ஊற்றிடை பெருகிடும்
உத்தமா போற்றி
என்னவா போற்றி
யேமனை எரித்திடும்
அண்ணலே போற்றி
ஏந்தலே போற்றி
எண்திசை வணங்கிடும்
கந்தனே போற்றி
ஐயனே போற்றி
அருலிடை மலர்ந்திடும்
ஆதவா போற்றி
ஒளிர்ந்தவா போற்றி
உலகினை காத்திடும்
ஒருவனே போற்றி
ஓங்கினாய் போற்றி
உமையவள் உருகிடும்
அறுமுகா போற்றி
ஒளவினாய் போற்றி
அகத்திடை அகலா
ஆண்டவா போற்றி
அக்துன தருளே
மாற்றிட வேண்டேன்
சிற்றிடை நாயகா
போற்றி போற்றி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)